பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 12, 2013

பிரபஞ்ச சக்தியின் மூலமாக வாழ்க்கையை விரும்பிய வகையில் வடிவமைத்துக் கொள்ள ஓர் அற்புதப் பயிற்சி!




வாழ்க்கை இலகுவாக இருப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? இந்தக் கேள்வி ஓடாத மனிதரே இல்லை எனலாம். உடல் நலம் என்பதற்கு மட்டுமான முக்கியத்துவம் இன்று மாறி வாழ்வு நலம் என்று விரிவடைந்திருப்பது இதற்கு நல்ல சான்று. 

யோகா, தியானம், ஆயுர்வேதா போன்ற பல்வேறு கீழை நாட்டு நல்வாழ்வு முறைகளை மேலை நாட்டினர் வெகுவாகப் பயன்படுத்திப் பயன்பெறும் அதே நேரத்தில் மேலை நாட்டிலும் புதுப் புது வழி முறைகள் தோன்றாமலில்லை.

கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வரும் நிலா இப்படிப்பட்ட 30க்கும் மேலான சுகமளிக்கும் வழிமுறைகளை அறிந்தவர். தாம் அறிந்தவற்றை இணையம் வழியாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தம் எழுத்து மூலமாகப் பரப்பிவருவதோடு நேரடி வகுப்புகளும் நடத்தி வருகிறார். இது குறித்து ஜெயா டிவியின் காலைமலர் நிகழ்ச்சியில் விரிவாகப் பேசி இருக்கிறார்:


தாம் கற்றவற்றில் 'ஆக்ஸஸ் பார்ஸ்' என்ற வழிமுறையைக் குறித்து சிலாகித்துப் பேசும் நிலா, ஆக்ஸஸ் பார்ஸ் பலருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். தாம் கற்றுக் கொண்ட சுகமளிக்கும் வழிமுறைகளிலேயே இந்த வழிமுறை மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று கூறுகிறார்.

ஆக்ஸஸ் பார்ஸின் 32 புள்ளிகளும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துடன் தொடர்புகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, படைப்புத் திறன், சுகம் பெறுதல், மன அமைதி, பணவரவு போன்றவற்றைச் சொல்லலாம். 

உங்களுக்கு ஓவியம் வரைவதில் விருப்பம் இருக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதை செயல்படுத்த போதுமான ஏதோ ஒன்று தடைக்கல்லாக இருக்கிறது என்பதை உணர்வீர்களேயானால் கிரியேட்டிவிட்டிக்கான சக்திப் பட்டையைத் தொட்டு அதில் முடக்கப்பட்டுள்ள ஆற்றலை விடுவித்தால் போதுமானது. படைப்புத் திறன் பொங்கி வருவதை உணரமுடியும். இதே முறையில் பணவரவினையும் அதிகரிக்கலாம். இப்படி 32 புள்ளிகளுக்கும் ஒவ்வொருவிதமான பயன்பாட்டினை உணரலாம்.

தன்னுடைய பல்வேறு அனுபவங்களையும் தன்னுடைய சுவையான நடையில் மடை திறந்து நிலாச்சாரலில் பகிர்ந்து வருகிறார் நிலா. வாசகரிடையே பெரிதும் விரும்பப்பெற்ற பகுதியாக வலம் வந்த 'மடை திறந்து' தொடரின் தொடர்ச்சியாக, தனது அனுபவங்களை முடிவிலா சாத்தியங்கள் எனும் தலைப்பில் தற்போது பதிந்து வருகிறார்.

அண்மையில், தனது உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்திருந்த நிலா சில ஆக்சஸ் பார்ஸ் வகுப்புகளை நுங்கம்பாக்கம் பகுதியில் நடத்தியிருந்தார். சுமார் முப்பதிற்கும் மேற்பட்டோர் சுகமளித்தல் சிகிச்சையினை எடுத்துக்கொண்டனர். அவர்களில் பலர் வகுப்புகளில் பங்கேற்று தாமும் இப்பயிற்சியினைக் கற்றுக்கொண்டு மக்களிடையே கொண்டு சென்று வருகின்றனர். மக்களிடையே நல்வரவேற்பு பெற்ற இந்நிகழ்வின் தொடர்ச்சியாகவும் ஜெயாடிவி நேயர்களிடமிருந்து தொடர்ந்து வந்த வண்ணமிருக்கும் விருப்ப அழைப்புகள் காரணமாகவும், மீண்டும் சில வகுப்புகளை ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்திலும் எடுக்க விழைந்திருக்கிறார் நிலா.

ஆக்ஸஸ் பாரினால் கிடைக்கக்கூடிய நன்மைகளுள் சில :

• மன நிம்மதியும், அமைதியும்
• மனத் தெளிவு நிலை
• நல்ல அதிர்வலைகளுடன் கூடிய ஆரோக்கிய உடல்நிலை
• மேம்பட்ட சக்தி நிலை
• சிக்கிய பழக்கங்களிலிருந்து விடுபடுதல்
• வலி குறைதல் அல்லது முற்றிலும் நீங்கிய நிலை
• அமைதியான, ஆழ்ந்த உறக்க நிலை
• எப்பேர்ப்பட்ட சூழல்களுக்கும் பொருந்திப் போதல்

ஆக்ஸஸ் மூலம் தான் பெற்ற பலன்கள் குறித்து ஆஸ்திரேலிவாயைச் சேர்ந்த ஜூலி ஸ்மித் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
 

No comments: